இப்போது நாங்கள் நான்காவது மாடியில் வசித்துக்கொண்டிருக்கிறோம். கீழ் மற்றும் எதிர் வீடுகளிலிருப்போர் அதிர்ச்சியடையும் வண்ணம் திடீர் திடீர் என எங்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது, பகல் நேரங்களிலும் நள்ளிரவு நேரங்களிலும் கூட..
அலறுவது யார்? ஏன்?
*ஆசை ஆசையாய் வாங்கிவந்த புதிய பேனா கரகரவென தரையில் வைத்து கீறப்படுகிறது.
*மெயில் செக் பண்ணிக் கொண்டிருக்கப்படும் போது கீ போர்டில் சர்ரென பிஸ் அடிக்கப்படுகிறது.
*பல் தேய்த்துவிட்டு பேப்பர் பார்க்க பேப்பரை தேடினால் அதற்குள்ளாகவே சுக்கல் நூறாக கிழிக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் டாய்லெட் பேப்பராக பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
*பைக் சாவி வாசல் வெளியில் கண்டெடுக்கப்படும் நிமிடங்களில்..
"ஆஆஆஆஆஆஆவ்வ்வ்.."
அலறுவது நான்.!
*சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிவி ரிமோட் கண்ட்ரோலர் புளிக்குழம்பு சட்டியில் திடுமென முக்கி வைக்கப்படுகிறது.
*ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.
*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது.
*நள்ளிரவில் தோளில் கிடத்திய ஸ்டேன்டிங் நிமிடங்கள் மணிகளாய் மாறும் நேரங்களில்..
"ஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்"
அலறுவது மனோ.!
*தண்ணீரில் அளவளாவ அனுமதி மறுக்கப்படுகிறது.
*வலுக்கட்டாயமாக சாதம் திணிக்கப்படுகிறது.
*புத்தகங்கள், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், செல்போன்கள், சிடிக்கள் போன்றவற்றையெல்லாம் கேட்டவுடனேயே அக்செஸ் செய்துவிடமுடிவதில்லை.
*எவ்வளவு கவனமாக நடந்தாலும் இந்தத்தரை வழுக்கி விழச் செய்துகொண்டேதான் இருக்கிறது.
*நள்ளிரவு இரண்டு மணிக்கு கதவைத்திறந்து உலாத்தமுடிவதில்லை.
*காரணங்கள் வேண்டுமா என்ன, பொழுதே போகாத தருணங்களில்..
"ஈஈஈஈஈஈஈஈய்ய்ய்"
அலறுவது கிச்சு (தி ஜூனியர்).!
Thursday, March 4, 2010
Wednesday, March 3, 2010
என்னுடைய பயோடேட்டா
பெயர் : கிருத்திகா
வயது : இரண்டு முடிந்து மூன்று தொடங்கியது
தொழில் : படுத்துவது
உபதொழில் : தோளில் மட்டுமே தூங்குவது
நண்பர்கள் : வெளியே தூக்கிச்செல்பவர்கள்
எதிரிகள் : தண்ணீரில் சலம்ப விடாதவர்கள்
பிடித்த வேலை : கையில் கிடைப்பதை எடுத்து கண்ணில் படுவதன் மேல் எறிவது (அதாவது செல்போனை டிவி மேல் எறிவது போன்ற)
பிடித்த உணவு : ஐஸ்கிரீம், கேக் (அதுவும் இரவில்)
பிடித்த உடை : எதுவும் இல்லை (அதாவது எதுவும் இல்லாமலிருப்பது)
பிடித்த இடம் : ஃபிரிட்ஜ், பாத்ரூம் ( எப்போதும் தண்ணீரில் விளையாட வேண்டும்)
விரும்புவது : கொட்டிக்கவிழ்ப்பது (பவுடர் டப்பா - இது வரை குறைந்தது ஐந்து கிலோ காலி ஆயிருக்கும் , உணவுக்கிண்ணம், தண்ணீர் பாட்டில் என எதையும் எப்போதும்)
விரும்பாதது : சாப்பிடுவது
பொழுதுபோக்கு : இரவு நேரங்களில் அலறி பிறரை எழுப்பிவிடுவது
பிடித்த பொருட்கள் : வாட்ச், செல்போன் (அதுவும் அப்பவோடது) , ரிமோட், etc.,
பிடிக்காத பொருட்கள் : பொம்மைகள்
சமீபத்திய எரிச்சல் : கதவிடுக்கில் நிலையில் விழுந்து அடி வாங்கியது
நீண்டகால எரிச்சல் : பால்
சமீபத்திய சாதனை : முத்தம் கொடுக்கக் கற்றது
நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது

Tuesday, March 2, 2010
Subscribe to:
Posts (Atom)