Tuesday, May 25, 2010

டாக்டர் உடன் ஒரு சந்திப்பு

வாரத்தில் ஒரு நாள் சளி இருமல் வரும் , அது ஆறு நாளைக்கு போகாது , ஒரு நாள் அம்மா என்னை டாக்டரிடம் கூட்டிட்டு போனாங்க

டாக்டர்: ஹலோ கிச்சு குட்டி , எப்படி இருக்கீங்க?
கிச்சு: நல்லா இருக்கேன்.
டாக்டர்: வாரத்துல எப்படியாவது ஒரு முறையாவது என்ன வந்து பாக்கணும் இல்லையா?
கிச்சு: ஹாம்
டாக்டர்: என்ன ஆச்சு?
மனோ: சளி டாக்டர், எப்பவும் தன்ணிலேயே விளையாடுறா....
டாக்டர்: தண்ணியில விளையாடுனா நான் ஊசி போடுவேன்,மருந்து குடிக்கணும் ....
கிச்சு: நான் மருந்து குடிச்சிட்டு தண்ணியில விளையாடுவேன் ....
மனோ: பாருங்க டாக்டர் இவ எப்பவும் இப்படிதான் செட்டை பண்ணுரா, என்ன பண்ணன்டே தெரியல?
டாக்டர்: சின்ன பிள்ளை அப்படி தான் செட்டை பண்ணும், நாம தான் கவனமா பாத்துகிடனும்...

இந்த மருந்த குடுங்க, திரும்ப சளி வந்தால் நாளைக்கு வந்து காட்டுங்க, பாய் கிச்சு, செட்டை எல்லாம் பண்ணக்கூடாது சரியா?

கிச்சு: ஹாம்

டாக்டர்: பாய் கிச்சு
கிச்சு: பாய் சி யு

டாக்டர்: கிளேவர் கேர்ள் :)

Thursday, March 4, 2010

மூன்று அலறல்கள்

இப்போது நாங்கள் நான்காவது மாடியில் வசித்துக்கொண்டிருக்கிறோம். கீழ் மற்றும் எதிர் வீடுகளிலிருப்போர் அதிர்ச்சியடையும் வண்ணம் திடீர் திடீர் என எங்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது, பகல் நேரங்களிலும் நள்ளிரவு நேர‌ங்களிலும் கூட..


அலறுவது யார்? ஏன்?


*ஆசை ஆசையாய் வாங்கிவந்த புதிய பேனா கரகரவென தரையில் வைத்து கீறப்படுகிறது.


*மெயில் செக் பண்ணிக் கொண்டிருக்கப்படும் போது கீ போர்டில் சர்ரென பிஸ் அடிக்கப்படுகிறது.


*பல் தேய்த்துவிட்டு பேப்பர் பார்க்க பேப்பரை தேடினால் அதற்குள்ளாகவே சுக்கல் நூறாக கிழிக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் டாய்லெட் பேப்பராக பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.


*பைக் சாவி வாசல் வெளியில் கண்டெடுக்கப்படும் நிமிடங்களில்..


"ஆஆஆஆஆஆஆவ்வ்வ்.."


அலறுவது நான்.!


*சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிவி ரிமோட் கண்ட்ரோலர் புளிக்குழம்பு சட்டியில் திடுமென முக்கி வைக்கப்படுகிறது.


*ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.


*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது.


*நள்ளிரவில் தோளில் கிடத்திய ஸ்டேன்டிங் நிமிடங்கள் மணிகளாய் மாறும் நேரங்களில்..


"ஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்"


அலறுவது மனோ.!


*தண்ணீரில் அளவளாவ அனுமதி மறுக்கப்படுகிறது.


*வலுக்கட்டாயமாக சாதம் திணிக்கப்படுகிறது.


*புத்தகங்கள், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், செல்போன்கள், சிடிக்கள் போன்றவற்றையெல்லாம் கேட்டவுடனேயே அக்செஸ் செய்துவிடமுடிவ‌தில்லை.


*எவ்வளவு கவனமாக நடந்தாலும் இந்தத்தரை வழுக்கி விழச் செய்துகொண்டேதான் இருக்கிறது.


*நள்ளிரவு இரண்டு மணிக்கு கதவைத்திறந்து உலாத்தமுடிவ‌தில்லை.


*காரணங்கள் வேண்டுமா என்ன, பொழுதே போகாத தருணங்களில்..


"ஈஈஈஈஈஈஈஈய்ய்ய்"


அலறுவது கிச்சு (தி ஜூனியர்).!

Wednesday, March 3, 2010

என்னுடைய பயோடேட்டா

பெயர் : கிருத்திகா


வயது : இரண்டு முடிந்து மூன்று தொடங்கியது


தொழில் : படுத்துவது


உபதொழில் : தோளில் மட்டுமே தூங்குவது


நண்பர்கள் : வெளியே தூக்கிச்செல்பவர்கள்


எதிரிகள் : தண்ணீரில் சலம்ப விடாதவர்கள்


பிடித்த வேலை : கையில் கிடைப்பதை எடுத்து கண்ணில் படுவதன் மேல் எறிவது (அதாவது செல்போனை டிவி மேல் எறிவது போன்ற)


பிடித்த உணவு : ஐஸ்கிரீம், கேக் (அதுவும் இரவில்)


பிடித்த உடை : எதுவும் இல்லை (அதாவது எதுவும் இல்லாமலிருப்பது)


பிடித்த இடம் : ஃபிரிட்ஜ், பாத்ரூம் ( எப்போதும் தண்ணீரில் விளையாட வேண்டும்)


விரும்புவது : கொட்டிக்கவிழ்ப்பது (பவுடர் டப்பா - இது வரை குறைந்தது ஐந்து கிலோ காலி ஆயிருக்கும் , உணவுக்கிண்ணம், தண்ணீர் பாட்டில் என எதையும் எப்போதும்)


விரும்பாதது : சாப்பிடுவது


பொழுதுபோக்கு : இரவு நேரங்களில் அலறி பிறரை எழுப்பிவிடுவது


பிடித்த பொருட்கள் : வாட்ச், செல்போன் (அதுவும் அப்பவோடது) , ரிமோட், etc.,


பிடிக்காத பொருட்கள் : பொம்மைகள்


சமீபத்திய எரிச்சல் : கதவிடுக்கில் நிலையில் விழுந்து அடி வாங்கியது


நீண்டகால எரிச்சல் : பால்


சமீபத்திய சாதனை : முத்தம் கொடுக்கக் கற்றது


நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது

Tuesday, March 2, 2010

இது என்னுடைய போட்டோ , உங்களுக்கு இம்சை கொடுப்பதே என்னுடைய நோக்கம் !!!

இது என்னுடைய போட்டோ , உங்களுக்கு இம்சை கொடுப்பதே என்னுடைய நோக்கம் !!!